Posts

என்னமா இப்படி பண்றேங்களேம்மா!!! சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த சோதனை!!!

Image
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழிச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை .   இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை   லட்சுமி ராமகிருஷ்ணன்  தொகுத்து வழங்குவார்.  குடும்ப பிரச்னையை பேசி தீர்த்துவைத்து கும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பது தான்  இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.  இந்த நிகழ்ச்சி இடையில் பல பிரச்னைக்களை சந்தித்து  இன்றளவும் பிரபலமாக பேசும்படி ஓடிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூலம் பலரும் தங்கள் பிரச்சனை தீர்ந்து நன்கு வாழ்வதாக கூறியுள்ளனர்.  இவ்வாறு எல்லாம் பெரிதளவில் பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டுஉள்ளது. “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி தனிமனித உரிமையில் தலையிடுவது போல உள்ளது,  என விருதுநகரை சார்ந்த சோமசுந்தரம் இந்த நிகழ்ச்சியின் மீது மனு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துஉள்ளர்.  அதன் படி  இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து  தற்போது அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து   ...

“ரஜினி” மகனாக “பாபி சிம்கா”!!, முக்கிய வேடத்தில்- மக்கள் செல்வன்!!! கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில்

Image
ரஜினியின் அடுத்த படம் :-    கபாலி  பிறகு வரிசையாக பா.ராஜித் இயக்கத்தில்  “காலா “ , சங்கர் இயக்கத்தில்  2.0  என படங்களை வைத்து உள்ள ரஜினி தற்போது  கார்த்திக் சுப்ராஜ்  இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்த படத்தை சன் பிட்சர்ஸ் தயாரிக்க போவதாகவும், அதில்  ரஜினி  க்கு ஜோடியாக “ சிம்ரன்”   மேலும் ரஜினி மகனாக “ பாபி சிம்கா”  நடிக்க போவதாக கூறப்படுகிறது.  மக்கள் செல்வன் – “விஜய் சேதுபதி”  இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க அனிருத் இசையில் இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு பெயர் தேர்ந்தெடுக்காத நிலையில், இந்த படத்தை படத்தை பற்றிய செய்திகள் வெளிவந்து உள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. காலா படத்தின் பாடல் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைபெற்றுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.